ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்

                        Paper-1.                              ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்:
இயலாநிலை-பொருள்:
            ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறப்பர்.பிறந்த பின் சூழ்நிலை காரணமாக உடல் குறைபாடோ,அறிவு வளர்ச்சி குறைபாடோ ஏற்படும்.இதுவே இயலாநிலை எனப்படும்.
வரையறை:
              உடல் உறுப்புகளின் ஊறுபாடுகள் ஏற்படுவதன் விளைவால் ஒருவர் சில செயல்களை மற்றவர்களைப் போல் செய்ய முடியாமல் போவதுடன் அன்றாட வாழ்வியல் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியாமல் போகும் நிலை இயலாநிலை எனப்படும்.
இயலாமையின் பண்புகள்:
              உடல் உறுப்பு ஊறுபாடுகளின் விளைவால் ஏற்படுகிறது.
              உடல் உறுப்புகள் இயல்பு நிலையிலிருந்து மாறி அமைந்திருக்கலாம் அல்லது உருபெறாமலேயே இருக்கலாம்.
     எ:கா:
               பிளவுபட்ட மேல் அண்ணம்,கைக் கால்களில் விரல்கள் இல்லாமல் இருத்தல்.
              ஊனத்தின் காரணமாக அன்றாட செயல்பாடுகளில் மற்றவர்களை போல் ஈடுபட முடியாது.
              தகுந்த பயிற்சி கல்விச்சூழல் மூலம் மறுவாழ்வு அளிக்கலாம்.
இயலா நிலையினருக்கான காரணங்கள்:
             மரபுரீதியாகக் கோளாறுகள் ஏற்படுதல்.
            தீவீர ஊட்டசத்துக் குறைபாடு.
            செயற்கை முறையில் கருவுறச் செய்தல்.
            போலியோ,பக்கவாதம்,மூளைக் காய்ச்சல்,மூளை வீக்கம் போன்றவை ஏற்படுதல்.
             கருவுற்றிருக்கும் போது பயன்படுத்திடும் மருந்துகளின் தாக்கம்.
             குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்.
             வாழ்க்கையில் எதிர் கொண்ட மோசமான விபத்துக்கள்.
          
          

Comments

Popular posts from this blog

கலைத்திட்டத்தில் மொழி

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்