அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்

                                       Paper-3.                                               அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்:
மாணவர் மைய கல்வியின் பண்புகள்:
            மாணவர் மைய கல்வியின் நோக்கமே மாணவர்களின் இயல்பான வளர்ச்சிக்குரியது ஆகும்.
            மாணவர்கள் தனித்தோ அல்லது குழுக்களாக பிரிந்தோ ஆசிரியரின் மேற்பார்வை அல்லது வழிகாட்டுதலுடன் ஈடுபட முழு வாய்ப்பு உள்ளது.
            தனக்குரிய பாடப்பொருளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான நிலை உண்டு.
            கற்றல் செயலில் மாணவர்களின் ஆர்வத்தை நேரடியாக ஈடுபட தூண்டுகிறது.
            மாணவர் மைய கலைத்திட்டத்தில் கட்டாயப்பாடங்களும் விருப்பப் பாடங்களும் உள்ளடக்கி இருக்கும்.
           கட்டாயப் பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கற்பிப்பதாகவும் அமையும்.
           நல்ல குடிமக்களை உருவாக்கும் திட்டமாக செயல்படுகிறது.
           சமூகத்திற்கு உதவும் வகையில் உயர்நெறி முறைகளுடன் மாணவர்களை உருவாக்குவதில் முன் நிற்கிறது.
           ஆசிரியரே மாணவர்களுக்கான சிறந்த நண்பராக,ஆலோசகராக உடனிருந்து உதவுபவராக தேவையான வசதிகளை அமைத்து தருபவராக முன் நிறுத்தப்படுகிறார்கள்.
            சிறப்பு பாடங்கள் மாணவர்களின்   தேவையையும் ஒட்டியதாக அமைதல் சிறப்பு பாடப்பகுதி என அழைக்கப்படும்.
           திறன்களை உருவாக்குதல்,மதிப்பு கல்வி போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது.
           மாணவர்களுக்கு உகந்த திட்டம் என்பதால் இது கற்போர் மைய கலைத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
            கற்றல் விளைவுகளை உடனுக்குடன் தீர்மானம் செய்து மேலும் மேன்மைப்படுத்திடும் வகையில் தொடர்ச்சியான மதிப்பீடு நடத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கலைத்திட்டத்தில் மொழி

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்