பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள் நுணுக்கங்கள் பகுதி 1
Paper-7
பொருளறிவியல் கற்பிக்கும்முறைகள்
நுணுக்கங்கள் பகுதி-1
அனுப வழி கற்றல் முறை:
மாணவர்கள் தனது அனுபவத்தின் மூலம் கற்றலே அனுபவ வழி கற்றலாகும்.இவ்வகையான கற்றலின் மூலம் மாணவர்களின் திறன்,அறிவு மற்றும் அனுபவம் போன்றவை வளர்கிறது.
நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு ஆசிரியர் கூறும் விரிவுரை கற்றலுக்கு அப்பால் சென்று சமுதாயத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி கற்றலே அனுபவ வழி கற்றல்.
இதில் வகுப்பிற்கு வெளியே கற்கும் முறைகளான பயிற்சி முகாம்,அயல் நாட்டு கல்வி, களப்பயணம்,கள ஆராய்ச்சி,பிறருக்கு உதவுதல் போன்றவை அடங்கும்.
அனுபவ வழி கற்றல் முறை என்ற கருத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் ஜான்டூயி மற்றும் பியாஜே போன்ற உளவியலாளர்கள் ஆவர்.
பிரபல உளவியலாளரான கோல்பர்க் என்பவர் மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுபவ வழி கற்றல் கோட்பாட்டினை உருவாக்கினார்.
அனுபவ வழி கற்றலின் அடிப்படை கூறுகள்:
கோல்பர்க்கின் அனுபவ வழி கற்றல் சுழற்சியில் 4 அடிப்படை கூறுகள் காணப்படுகின்றன.அவை,
- உறுதியான அனுபவங்கள்
- பிரதிபலிப்பை உற்றுநோக்குதல்
- சுருக்கமான கருத்தாக்கம்
- செயலாக்க சோதனைகள்
இச்சுழற்சியில் மாணவர்கள் சமுதாயத்தில் பங்கு பெறும் போது உற்றுநோக்கல் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்துக்கொண்டே ஏற்கனவே பெற்ற அனுபவத்துடன் ஒப்பிட்டு ஒரு கருத்தை உருவாக்குகின்றன.இக்கருத்தை மனதில் கொண்டு தனது எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றன.
அனுபவ வழி கற்றல் ஒப்படைப்பின் அடிப்படைக் கூறுகள்:
இந்த ஒப்படைப்பானது மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாகவும் பொருளுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சமுதாய வளங்களை உற்றுநோக்கி பயன்படுத்த வாய்ப்பளிப்பதுடன் தமது அனுபவத்தை ஒப்படைப்புகளில் எழுதவும் அனுமதிக்க வேண்டும்.
அனுபவம் பெறுதல் என்பது மாணவர்களின் உணர்வு,ஆர்வம், ஆளுமை,உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
முன் அனுபவத்துடன் புதிய அனுபவத்தை ஒப்பிட்டு ஒப்படைப்புகளை தயாரிக்க வேண்டும்.
அனுபவ வழி கற்றலின் முக்கியத்துவம்:
அனுபவ வழி கற்றலானது மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கிறது.
அனுபவ வழி கற்றலானது மாணவர்களுக்கு தானே கற்கும் ஆற்றலை உருவாக்குகிறது.
அனுபவ வழி கற்றலானது சிக்கல்கள் நிறைந்த இந்த உலகத்தில் தான் வெற்றியடைய வழிவகுக்கிறது.
மதிப்புகள்
ReplyDelete