கற்றல் மற்றும் கற்பித்தல்
Paper-3.
கற்றல் மற்றும் கற்பித்தல்
பள்ளிக் கூட கற்றலுக்கு அப்பால்:
மாணவன் பள்ளியை விட்டு வந்ததும் நேராக தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து விடுகிறான்.அல்லது கணினி முன் சென்று அமர்ந்து விடுகிறான்.காரணம் என்ன?
பள்ளி பாடத்தை விட தொலைக்காட்சி நிகழ்வுகள் மாணவர்களை ஈர்க்கின்றன ஏன்? ஏனென்றால் மாணவனின் பள்ளிக்கூட கற்றலுக்கு அப்பால் கற்றல் நடைபெறுகிறது.
செய்தித்தாள்,வானொலி, தொலைக்காட்சி,கணினி ஆகியவை கற்றலுக்கு அப்பால் கற்பித்தலை செய்கின்றன.ஊடகங்கள் மாணவர்களின் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தருகின்றன.
வீடுசமுகம்,ஒப்பார்க்குழு, ஊடகங்கள்,நூல் நிலையங்கள்,தகவல் தொடர்பு சாதனங்கள்,சமூக குழுக்கள், அரசு சாரா அமைப்புகள்,களப்பயணம் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்கு வெளியே கற்றல் நடைபெறுகிறது.
வகுப்பறைக்கு வெளியே மாணவனின் விருப்பத்துடனும்,ஆர்வத்துடனும், கட்டுபாடின்றியும் கற்றல் நடைபெறுகிறது.எனவே மாணவன் உற்றுநோக்கல் திறனை வளர்த்துக் கொண்டு பட்டறிவு சார்ந்த கற்றலை பெறுவதால் சமுதாயத்தில் உயர்ந்தவனாக கருதப்படுகிறான்.
ஆற்றல் படைத்த மாணவர்கள் நூலகத்திற்கு சென்று தனக்கு தேவையான துறை நூல்களை படிப்பதால் அத்துறையில் சிறந்தவனாக விளங்க முடியும்.
சமுதாயத்தில் உயர்வதற்கு ஏற்ற உயர்ந்த நூல்களையும் படிக்க முடிகிறது.
பள்ளிக்கூடத்திற்கு அப்பால் தான் விரும்பும் தலைப்பினை தம் இல்லத்தில் கணினியின் முன் அமர்ந்தவாறே இணையம் மூலமாக தேர்ந்தெடுத்து படிக்க முடிகிறது.விக்கிபீடியா போன்ற வலைதளங்களையும் இணைய இணைப்பு மூலமாக கற்றுக் கொள்ள முடிகிறது.
கணிப்பொறியின் மூலமாக கற்பதால் கற்றல் இனிமையாக கற்க முடிகிறது.கற்றல் மாணவனின் திறன் அடிப்படையில் பள்ளிக்கு அப்பால் நடைபெறுகிறது.
நாள்,கிழமை,திங்கள் பருவம் என வெளிவரும் இதழ்களை மாணவர்கள் படித்து பள்ளிக்கூடத்திற்கு அப்பால் கற்கின்றன.கலாச்சார பண்பாட்டு விழாக்கள் நடைபெறும இடங்களில் சென்று இசை,நாடகம்,கூத்து ஆகியவற்றின் வழியாக தமிழ் பண்பாட்டினை உணர்ந்து கொள்ள முடிகிறது.
Comments
Post a Comment