கலைத்திட்டத்தில் மொழி

Paper-4.  
                                                        
கலைத்திட்டத்தில் மொழி  
              
வகுப்பறையில் பன்மொழி தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுதல்:
            பன்மொழி தன்மை என்பது கல்வி நிலைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை கற்பித்தல் ஊடகமாக பள்ளிகளில் பயன்படுத்துவதாகும்.(தமிழ்,ஆங்கிலம்,இந்தி) இந்த பன்மொழி தன்மை கல்விமுறையானது பள்ளிகளில் கற்றல் கற்பித்தலுக்கு அடித்தளமாக அமைகிறது.இவை நவீன கால கல்வி முறையில் முக்கியமான காரணியாக செயல்பட்டு வருகிறது.

             எ.கா:பள்ளி முன்பருவ கல்வி(Pre.kg,Lkg,Ukg).

             தமிழ்,ஆங்கிலம்,இந்தி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
பன்மொழித் தன்மையின் தன்மை:
  • பன்மொழி தன்மை பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் முறையை எளிதாக்குகிறது.
  • இவை நவீன காலத்திற்கு தகுந்தவாறு பல புதிய கருத்துகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
 யுனெஸ்கோ அமைப்பானது மொழி கொள்கையை;
             i)தாய்மொழி
            ii)வட்டார மொழி
           Iii)பன்னாட்டு மொழி என பரிந்துரை செய்துள்ளது.

  • மனிதர்கள் தகவல் தொடர்புகளை வளர்த்து கொள்ள விரும்பும் போது இது அவசியமான ஒன்றாகும்.
  • பல்வேறு சமூகங்களில் பண்பாடு,சமூக பின்னணி தெரிய வேண்டுமென்றால் இவை தேவையான ஒன்றாக அமைகின்றன.
  •  பன்மொழி தன்மை என்பது மனிதர்களிடத்தில் வேலைவாய்ப்பு என்பதை எளிதாக்குகிறது.
  • மனிதர்களது அறிவு திறனை வளர்க்க மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
  • உலகில் நிகழும் வணிகம்,அறிவியல் நுட்பங்களின் வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பன்னாட்டு மொழி என்பது தேவையான ஒன்றாகும்.          

Comments

Post a Comment

Popular posts from this blog

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்