தற்கால இந்திய சமுதாயமும் கல்வியும்

Paper-2
                                               
தற்கால இந்திய சமுதாயமும் கல்வியும்


இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான மொழிக் கொள்கை:
            வேத காலத்தில் சமஸ்கிருதமே பயிற்று மொழியாக அமைந்தது.
சமணம்,பௌத்தம், இஸ்லாம் போன்ற மதத்தை சார்ந்தவர்கள்.அவரவர் மொழியில் கல்வி கற்றனர்.குறிப்பாக இஸ்லாமியர்கள் பாரசீகம்,அரபு,உருது மொழிகளில் கல்வி கற்றனர்.

              15- ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகை முதல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை அவர்களால் ஏற்பட்ட அரசியல் தாக்கத்துடன் கல்வியிலும் தாக்கம் ஏற்பட்டது.உட் அறிக்கை பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும்,ஹண்டர் அறிக்கை தொடக்கநிலையில் தாய்மொழி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. 

கல்வியில் மொழி பிரச்சினை:
             இந்தியாவில் பயிற்று மொழி மற்றும் இணைப்பு மொழி அமைப்பது குறித்த சில சிக்கல்கள் எழுந்தது.அவையாவன;

             பல்வேறு நிலைகளிலும் (பள்ளி,கல்லூரி)பயிற்று மொழியாக அமைய வேண்டிய மொழி எது........தாய் மொழியா /பிராந்திய / வட்டார மொழியா.....?

             இந்தியாவின் இணைப்பு மொழியாக விளங்க வேண்டியது எது?இந்தியா.....? ஆங்கிலமா.....? இந்தி எனில ஆங்கிலத்தின் நிலை என்ன?

             பள்ளி குழந்தைகளுக்கு எத்தனை மொழிகளை கற்பிக்க வேண்டும்? அவை ஒவ்வொன்றும் பள்ளிக் கல்வியின் எந்த கட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும்?

நாட்டு விடுதலைக்கு பின் மொழித் துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்:
             பள்ளிக் கல்வியில் தாய்மொழி அல்லது வட்டார மொழி பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முக்கியத்துவம் பெற தொடங்கியது.

            ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழி வழியே கற்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையின் கீழ் சேர்க்கப்பட்டது.

             இந்தி வளர்ச்சிக்காகவும் அதனை நாடெங்கும் பரப்பவும் மத்திய கல்வி அமைச்சகத்தால் பல்வேறு "தேசிய மொழி வளர்ச்சி திட்டங்கள்"மேற்கொள்ளப்பட்டன.

            எ.கா:இந்தி மொழியின் வளர்ச்சிக்காக "தேசிய இந்தி இயக்கத்தை" ஆரம்பித்தது.

Comments

Popular posts from this blog

கலைத்திட்டத்தில் மொழி

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்