குழந்தைப் பருவமும்,வளர்ச்சியும்
Paper 1
குழந்தைப் பருவமும்,வளர்ச்சியும்
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கோட்பாடு:
i)முன்னேற்றம் தொடர்ச்சியானது:
மிக நுண்ணிய செல்லில் வாழ்க்கை தொடங்கி உடல் பெருக்கம்,மன வளர்ச்சி போன்ற படிப்படியான தொடர் முன்னேற்றங்களால் குழந்தை நன்கு இயங்க தொடங்குகிறது.ஆகவே ஒருவரது வாழ்நாள் முழுவதும்
முன்னேற்றம் தொடர்கிறது.
ii)முன்னேற்றம் என்பது வளர்ச்சி தனியாள் வேறுபாட்டிற்கு ஆட்பட்டது:
குழந்தைகளிடையே வளர்ச்சியிலும்,முன்னேற்றத்திலும் தனியாள் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
iii)வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும்
ஒரே சீராக அமைவதில்லை:
குளவி பருவத்தில் உடல் வளர்ச்சி அதிகமாகவும்,குழந்தை பருவத்தில் சிறிது குறைவாகவும்,பின்பு குமர பருவத்தில் விரைவாகவும் ஏற்படுகிறது.
iv)முன்னேற்றம் வரிசைகிரமமாக திகழ்கிறது:
குழந்தை ஒருங்களிக்க பழகிய பின் குப்புற படுத்து கொள்கிறது.பின் நீந்த ஆரம்பித்து உட்கார்ந்து கொள்கிறது.பின் எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் ஓடத் துவங்குகிறது.
v)முன்னேற்றம் என்பது பொதுமை துலங்கலில் ஆரம்பித்து குறிப்பிட்ட சிறப்பு துலங்கலில் நிறைவடைகிறது:
கைகளை இயக்க தொடங்கிய பின்னர் விரல்களில் இயக்கம் ஏற்படுகிறது.விரல்களில் பல்வகை அசைவுகளை ஏற்படுத்த குழந்தை கற்று கொள்கிறது.
vi)முன்னேற்றம் ஒருங்கிணைப்பு கொண்டது:
முன்னேற்றம் முழுமையிலிருந்து பகுதிகளுக்கும் பகுதியிலிருந்து முழுமைக்குமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
vii)முன்னேற்றத்தை முன்கூட்டியே யூகிக்க முடியும்:
குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும் போக்கினை வைத்து அது எவ்வளவு உயரம் வளர்ச்சிடையும் என்று முன்கூட்டியே கூற முடியும்.
viii)முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மரபு சூழ்நிலையின் தாக்கங்கள்:
முன்னேற்றமும் வளர்ச்சியும் மரபு மற்றும் சூழ்நிலையும் கூட்டுத் தாக்கத்தால் விளைவதாகும்.
Comments
Post a Comment