Paper-3. கற்றல் மற்றும் கற்பித்தல் பள்ளிக் கூட கற்றலுக்கு அப்பால்: மாணவன் பள்ளியை விட்டு வந்ததும் நேராக தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து விடுகிறான்.அல்லது கணினி முன் சென்று அமர்ந்து விடுகிறான்.காரணம் என்ன? பள்ளி பாடத்தை விட தொலைக்காட்சி நிகழ்வுகள் மாணவர்களை ஈர்க்கின்றன ஏன்? ஏனென்றால் மாணவனின் பள்ளிக்கூட கற்றலுக்கு அப்பால் கற்றல் நடைபெறுகிறது. செய்தித்தாள்,வானொலி, தொலைக்காட்சி,கணினி ஆகியவை கற்றலுக்கு அப்பால் கற்பித்தலை செய்கின்றன.ஊடகங்கள் மாணவர்களின் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தருகின்றன. வீடுசமுகம்,ஒப்பார்க்குழு, ஊடகங்கள்,நூல் நிலையங்கள்,தகவல் தொடர்பு சாதனங்கள்,சமூக குழுக்கள், அரசு சாரா அமைப்புகள்,களப்பயணம் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்கு வெளியே கற்றல் நடைபெறுகிறது. வகுப்பறைக்கு வெளியே மாணவனின் விருப்பத்துடனும்,ஆர்வத்துடனும், கட்டுபாடின்றியும் க...