பாலினம்,பள்ளி மற்றும் சமூகம்

                            Paper-6
                              
   பாலினம்,பள்ளி மற்றும் சமூகம்

வகுப்பறை இடைவினைகளில் பாலின வேறுபாடுகள் காட்டுதல்:
              வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவியர் இடையே நடைபெறும் இடைவினை செயல்களில் பாலின பாகுபாடு காணப்படுகிறது.அவையாவன;

              ஆசிரியர் ஆணாக இருந்தால் ஆண் மாணவரிடம் அதிகமாகவும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் பெண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே உரையாட முடிகிறது.

               பெண் ஆசிரியராக இருந்தால் பெண் மாணவரிடம் அதிகமாகவும் அனைத்து செய்திகளையும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் ஆண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே உரையாட முடிகிறது.

               ஆசிரியர் கூறும் எடுத்துக்காட்டுகளில் அதில் வரும் ஆடவனே புத்திசாலியாகவும் ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து காப்பவனாகவும் இருப்பான்.

               கடினமான வினாக்கள் மாணவர்களிடமே கேட்கப்படும்.மாணவனே அங்கீகாரமும்,பாராட்டும் பெறுவான்.மாணவர்களுக்கு கற்பிக்க அதிக முயற்சி தேவை என ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

               பெண்களை குறித்து பண்பாட்டு அளவில் ஏற்கப்படாத சொற்களை கூறுதல்.அதாவது வாயாடி,வம்புக்காரி.

                மாணவிகளுக்கு தலைமை பொறுப்பு,நிர்வாக பொறுப்பு போன்றவற்றை தர மறுத்தல்.

                மாணவிகளில் சிறந்தவரை அடக்கம்,பொறுமை,தொண்டு மனப்பான்மை ஆகியவற்றையே அளவு கோலாக கொண்டு தெரிவு செய்தல்.ஆகவே வகுப்பறை இடைவினை புரிதல் செயலில் பாலின பாகுபாடு அதிக அளவிலேயே காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கலைத்திட்டத்தில் மொழி

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்