Pedagogy of physical science
PAPER - 7
Pedagogy of physical science
அனுபவ வழி கற்றல் முறை
- மாணவார்கள் தனது அனுபவத்தின் மூலம் கற்றலே அனுபவ வழி கற்றலாகும். இவ்வகையான கற்றலின் மூலம் மாணவர்களின் திறன், அறிவு, மற்றும் அனுபவம் போன்றவை வளர்கிறது.
- நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு ஆசிரியர் கூறும் விரிவுரைக் கற்றலுக்கு அப்பார் சென்று சமுதாயத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்திக் கற்றலே அனுபவ வழி கற்றல்.
- இதில் வகுப்பிற்கு வெளியே கற்கும் முறைகளான பயிற்சி முகாம், அயல்நாட்டு கல்வி, களப்பயணம், கள ஆராய்ச்சி, பிறருக்கு உதவுதல் போன்றவையடங்கும்.
- அனுபவ வழி கற்றல் முறை என்ற கருத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் ஜாண்டூயி மற்றும் ஜுன்பியாஜே போன்ற உளவியலாளர் ஆவார்.
- பிரபல உளவியலளரான கோல்பர்க் என்பவர் மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுபவ வழிகற்றல் கோட்பாட்டினை உருவாக்கினர்.
- உறுதியான அனுபவங்கள்
- பிரதிபலிப்பை உற்றுநோக்கல்
- சுருக்கமான கருத்தாக்கம்
- செயலாக்க சோதனைகள்
அனுபவ வழி கற்றல் ஒப்படைப்பின் அடிப்படை கூறுகள்
- இந்த ஒப்படைப்பானது மாணவரின் வாழ்க்கைக்கு உதவுவதாகவும் பொருள் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு சமுதாய வளங்கயை உற்று நோக்கி பயன்படுத்த வாய்ப்பு அளிப்பதுடன் தமது அனுபவத்தையும் ஒப்படைப்பில் எழுதவும் அனுமதிக்க வேண்டும்.
- அனுபவம் பெறுதல் என்பது மாணவர்களின் உணர்வு ,ஆளுமை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
- முன் அனுபவத்துடன், புதிய அனுபவத்தை ஒப்பிட்டு ஒப்படைப்புகளை தயாரிக்க வேண்டும்.
- அனுபவ வழி கற்றலானது இந்த விஞ்ஞான உலகில் வாழ்வதற்கான ஆற்றலையும் பிரச்சனையை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலையும் மாணவர்களிடம் வளர்க்கிறது.
- இக்கற்றலானது மாணவர்களை ஊக்குவிக்கிறது
- அனுபவ வழி கற்றலானது மாணவர்களின் சுய கற்றலை வளர் க்கிறது.
Comments
Post a Comment