Learning and teaching

    Paper3 
                Learning and teaching
                    கற்பித்தல் பணி
                 Teaching as a profession
கற்பித்தல் பணி:
                   ஆசிரியர் பணி என்பது மிகுந்த மனநிறைவு தருகின்ற பணியாகும்.  ஓய்வு பெறும் வயதில், எல்லா ஆசிரியர்களும் இத்தகைய மனநிறைவுடன் ஓய்வு  பெறுகிறார்களா என்பது கேள்விக்குரியது. எல்லா ஆசிரியர்களுமே மனநிறைவுடன் ஓய்வு பெற முடியும். அது அவர்களின் பணிக்காலத்தில் செயல்படும் முறையில் தான் இருக்கிறது. எனவே கற்பித்தல் பணியானது எப்பொழுதும் மனநிறைவையும்,மதிப்பினையும் பெற்றுத் தருகின்ற பணியாக விளங்குகிறது.
கற்பித்தல் பணியின் வகைகள்:
(1)மூத்த சகோதரனாக இருத்தல்:
                  ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு மூத்த சகோதரன்-சகோதரி என்ற தன்மையுடன் அவர்கள் செயல்பட்டால், எல்லா மாணவர்களுக்கும் அந்த ஆசிரியர்களைப் பிடித்துவிடும்.மூத்த சகோதரன் என்பவர் கண்காணிப்பார், கண்டிப்பார், ஏன் என்று கேள்வி கேட்பார்.ஆனால் வெறுக்கமாட்டார். ஆசிரியர் என்பவரும் அப்படித்தான் இருக்க வேண்டும். மாணவர்கள் சரியாக படிக்காத போது அவர்களை கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை வெறுக்காமல் அவர்களின் படிப்பிற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
(2)முன்னுதாரணமாக இருத்தல் :
                   மாணவர்களைப் பொறுத்த வரை, தங்கள் ஆசிரியர்கள் சொல்வதே சரியானது என்ற எண்ணம் மனதில் பதிந்திருக்கும். மற்றவர்கள் ஏதேனும் திருத்தம் சொன்னாலும், அதை தங்களின் ஆசிரியர் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் நினைப்பார்கள். மாணவர்களின் மனத்தில் ஆசிரியரைப் பற்றி இப்படிப்பட்ட பிம்பம் பதிவாகியிருக்கும் போது, அதற்கேற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
(3)இயந்திரத்தனம் இல்லாத பணி:
                    பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் நடத்திவிட்டுப் போனால் போதும், என நினைக்கின்ற இயந்திரத்தனமான ஆசிரியர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
(4)கரும்பலகைக் கல்வி:
                      ஆசிரியர் பணியில் முக்கிய இடம் வகிப்பது கரும்பலகை. ஆசிரியர் என்றதும் நினைவுக்கு வருவதும் கரும்பலகையின் முன் அவர் நிற்கும் தோற்றம் தான். பாடப்புத்தகத்தை அதிகமாகப் புரட்டாமல் கரும்பலகையை அதிகமாகப் பயன்படுத்தும் ஆசிரியரே.
                       கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு கரும்பலகையின் தேவை அதிகளவில் உள்ளது.
(5)மாணவர்களுடன் கலந்துரையாடல்:
                       வகுப்பறை,பாடப்புத்தகம், கரும்பலகை  என்ற அளவிலேயே மாணவர்களுக்கான கல்விப்பயிற்சி நின்று விடக் கூடாது. ஆசிரியர்-மாணவர் உறவு என்பது பலப்பட வேண்டும்.அதற்கு கலந்துரையாடல்களே பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் ஒரு நாள் மதியப்பொழுதில் கலந்துரையாடல்களை வைத்து கொள்ளலாம்.
(6)மாவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்துதல்:
                        இன்றைய கல்வி முறையில்   ஆசிரியரின் திறமை என்பது அவர்களிடம் மாணவர்களில் எத்தனை   பேர் தேர்வினில் வெற்றி  பெறுகிறார்கள்,எத்தனைப் பேர் நல்ல மதிப்பெண்  பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. தன்னிடம் படிக்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்துவது என்பது ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ள முக்கிய கடமையாக உள்ளது.
                
                      

Comments

Popular posts from this blog

கலைத்திட்டத்தில் மொழி

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்