Contemporary india and education
Paper-2.
Contemporary India and education
விவேகானந்தர்
கல்வி பற்றிய கருத்துக்கள்:•மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்து கிடைக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயலே கல்வி என்பார்.
•"அறிதல் என்பது மூடிக்கிடப்பதைத் திறந்து கண்டறிவதாகும்".நம் ஒவ்வொருவரின் மனமும் எல்லையற்ற அறிவையும்,ஆற்றலையும் கொண்டதாக உள்ளது.
•மூளைக்குள் திணிக்கப்பட்டுக் கலகம் செய்யும் தகவல்களும்,வாழ்நாள் முழுவதும் செரிக்காமல் தொந்தரவு செய்யும் செய்திகளும் கல்வி ஆகாது.
•உண்மையான கல்வி குழந்தைகளிடம் இயல்பான வளர்ச்சியை தூண்டுகிறது.
கல்வியின் நோக்கங்கள்:
(1)மனிதனை உருவாக்குதல்:
"கல்வியின் முடிவான,முழுமையான நோக்கம், மனிதனை உருவாக்குவதே;கல்விப் பயிற்சியின் விளைவாக ஒருவரிடம் வளர்ச்சி தோன்றுதல் வேண்டும்".
(2)நடத்தைக்கான கல்வி:
மனிதனிடம் இயல்பாகவே உள்ள நற்பண்புகளையும்,நன்னடத்தையையும்
வளர்ப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.எனவே சிந்தனையின் ஆற்றலைக் கல்வி வளர்த்திடல் வேண்டும்.
(3)ஆளுமைக்கான கல்வி:
ஆளுமை என்பது ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகும். மனிதனை உருவாக்குவதில் மூன்றில் இரு பங்கு ஆளுமையும் ஒரு பங்கு அறிவாண்மையும் சொல்லும் சேர்ந்து செயல்படுகின்றன. எனவே மனிதனை உருவாக்கும் கல்வியின் நோக்கம் ஆளுமையை உருவாக்குவதாக இருத்தல் வேண்டும்.
(4)நம்பிக்கை:
மனித குலத்தைக் காக்கும் உன்னதமான கோட்பாடு "நம்பிக்கையே" ஆகும். குழந்தை பிறந்த நிமிடத்திலிருந்து அதனிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.
கற்கும் முறைகள்:
"மனவொருமைப்பாடு":
அறிவைப் பெறும் ஒரேயோர்
உன்னதமான வழி மனத்தை ஒரு நிலைப்படுத்துதல் அல்லது மனவொருமைப்பாடு ஆகும்.மனவொருமைப்பாடு கூடுதலாக உள்ளவர்களிடம் அறிவும் கூடுதலாக இருக்கும்.
பிரம்மச்சரியம்:
•மனவொருமைப்பாட்டுடன்
நெருங்கிய தொடர்புடையது "பிரம்மச்சரியம்"ஆகும்.பிரம்மச்சரியமும் மனவொருமைப்பாடும் கற்றலோடு நெருங்கிய தொடர்புடையன.
•ஒருவரிடம் மனவொருமைப்பாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில்,அவர் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
•"சிந்தனையில் தூய்மை,சொல்லில் தூய்மை,செயலில் தூய்மை"என்பதே பிரம்மச்சரியம் ஆகும்.
ஆசிரியரும், மாணவரும்:
ஆசிரியர் என்பவர் தியாகி ; கற்பித்தலின் உன்னத எடுத்துக்காட்டு; அவருடைய நடத்தை சுடர்விடும் வெளிச்சம். உன்னதமான சமயக் கருத்துக்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர் ஆசிரியர், எனவே ஒரு மாணவர் தனது பிள்ளைப் பருவத்திலிருந்து ஆசிரியருடன் சேர்ந்து வாழ்ந்து கல்வி கற்க வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியரைத்
தெய்வத்திற்கு இணையாக மதித்து வணங்குதல் வேண்டும். ஆயினும், ஆசிரியரிடம் குருட்டுத்தனமாக மாணவர்கள் கீழ்ப்படிதல் கூடாது.
சமயக்கல்வி:
கல்வியின் உயிர்த்தளமாக விளங்குவது சமயமாகும். உலகில் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் கோட்பாடுகளை மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இராமர்,கிருஷ்ணர், மகாவீரர், இராமகிருஷ்ணர் போன்றோரின் தத்துவங்கள் சமயக்கல்வியில் வழங்கப்படுதல் வேண்டும். சமயங்களின் வழியே ஒருவர் தன்னை முழுமையாக அறியமுடியும்.
பெண்கல்வி:
பெண்கள் தங்களின் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குக் கல்வி வழங்கப்படுதல் வேண்டும். பெண்கல்வியின் அடிப்படையாக சமயம் விளங்குதல் வேண்டும்.
மக்கள் கல்வி:
•மக்களின் தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்படுதல் வேண்டும்.
• இந்தியா ஏழை நாடு.பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வறுமையின் காரணமாக படிக்க வரமாட்டார்கள்;தாய், தந்தையருக்கு உதவச் சென்று விடுவர்.
•"உழைப்பே தெய்வம் " என்ற உயர்ந்த நெறியை மக்களிடம் விதைக்க வேண்டும்.
•இந்தியா கிராமங்களில் வாழுகின்றது.எனவே கற்பதின் அவசியத்தை அவர்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.
Comments
Post a Comment