Childhood and growing up
Paper1
Childhood and growing up
குழந்தைப் பருவ
அனுபவங்கள் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டில் ஊடகங்களின் தாக்கம் Media
on early childhood experiences and
development ஊடகங்களில் குழந்தைகளின்
மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொலைக்காட்சியேயாகும்.தொலைக்காட்சி,
குழந்தைகள் மீது உடன்பாடான மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்
வல்லமை படைத்தது. ஒரு குழந்தையின் மீது தொலைக்காட்சி ஏற்படுத்தும்
தாக்கத்தின் தன்மை அதன் வளர்ச்சி நிலையைப் பொறுத்து அமைகிறது.அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தீங்கு விளைப்பவை அல்ல. ஆனால் முன் குழந்தைப்பருவத்தினர் அதிக அளவு நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் செலவிடும் போது, பல்வகை நிகழ்ச்சிகள் அவர்களது கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றுள் சில அவர்களது வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும். உதாரணமாக குழந்தைகளது மொழித்திறனை மேம்படுத்தக் கூடியவை, பொது அறிவை விரிவாக்கக் கூடியவை, உடல் நலத்தைப் பேணுவதற்குரிய வழிமுறைகளைக் கூறுபவை, கல்வி தொடர்பான தகவல்களை அளிப்பவை என அமைந்திருக்கக்கூடும்.ஆனால் பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம் பெறும் வன்முறைகள்,கெட்ட வார்த்தைகளைக் கொண்டு திட்டுதல் போன்றவை குழந்தைகளின் மனதைக்கெடுத்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கம்:
2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் குழந்தைகளது படுக்கை/படிப்பு அறைகளில் எவ்விதமான மின்னணு தகவல் பரப்பு ஊடகமும் இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது.
அமெரிக்கக் குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக ஏழு மணி நேரம் வீடியோ விளையாட்டுகள், இணைய தளம்,கணினி விளையாட்டுகள் போன்றவை மூலம் பொழுது போக்குவது பற்றி மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் வன்முறைகளில் நாட்டம் கொள்ளுதல், உடல் பருமன் அதிகரிப்பு, கண் பார்வை மங்கல், மனக்குழப்பங்கள் அடைதல், பேசும் போது கெட்ட வார்த்தைளை தயக்கமின்றி கூறுதல் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
புகைபிடித்தல்,மது அருந்துதல், போதைப்பொருள் பழக்கம் போன்றவையும் பெரும்பிரச்சனைகளாக மாறி வருகின்றன.பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படியாமை, அவர்களை விமர்சித்தல் ஆகியவை வீரச் செயல்களாகக் கருதப்படுகின்றன.
குடும்பத்தில் நல்லுறவுகள் பாதிக்கப்படுவதற்கு ஊடகங்களும் காரணமாகிவிட்டது வருந்தத்தக்கது.
Comments
Post a Comment