Paper 5 பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல் கலைத்திட்ட பாடப்பகுதிகள்: கலைத்திட்டம் என்பது ஒரு படிப்பு கால அளவில் மாணவர்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டிய பாடங்கள் மற்றும் பாட இணை செயல்களைக் குறிக்கிறது.அகராதியில் கலைத்திட்டம் என்பது கல்வி நிறுவனங்களில் அளிக்கப்படும் படிப்புகள் என்று பொருள்படும். கலைத்திட்டம் என்ற சொல் குறிப்பிட்ட படிப்பின் மூலம் மாணவனுக்கு கிடைக்கும் அறிவு,செய்திறன் பயிற்சி,ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடப்பகுதிகள்,ஒப்படைப்புகள்,பயன் படுத்தப்படும் நூல்கள்,ஒலி மற்றும் ஒளி தகடுகள்,கற்றல் தேர்ச்சியை மதிப்பிடும் உத்திகள் என்ற அனைத்தும் உள்ளடக்கியதாகும். வரையறை: "கலைத்திட்ட பாடப் பகுதிகள் எந்த வடிவத்தில்(ஒலி,ஒளி,உரை) வேண்டுமானாலும் காணப்படலாம்.மேலும் இது கருத்துகளை கற்பவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது". ...
Comments
Post a Comment